வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 2 ஜனவரி, 2012

ஊதியம் பெற்ற உயிர்

நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் ஊதியம் எதிர்பார்க்கிறோம்.
ஊதியம்..

உடலுக்குச் சேர்கிறதா? 
உயிருக்குச் சேர்கிறதா?

உடலுக்குச் சேரும் ஊதியம் உடலோடு அழிந்துபோகிறது!
உயிருக்குச் சேரும் ஊதியம் அழியாது நிலைத்து நிற்கிறது!
உடல் விரும்பும் ஊதியம் உணவு!
உயிர் விரும்பும் ஊதியம் புகழ்!
உடல் தன்னை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று சுயநலத்துடனேயே செயல்படுகிறது அதனால் காலவெள்ளத்தில் அழிந்துபோகிறது..
உயிர் புகழைத்தவிர வேறு எதையும் விரும்புவதில்லை அதனால் எத்தனை காலங்கள் ஆனாலும் நினைவில் கொள்ளப்படுகிறது..

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு
திருக்குறள் -231

வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறு எதுவுமில்லை என்கிறார் வள்ளுவர்.

இதோ உயிர் ஒன்று பெற்ற ஊதியம்..

The young will not wear it
Bangled women will not pluck it
Neither minstrel nor his singing women
will bend this stalk of jasmine
with the crook of a lute
to wear it in their hair

cattan of the big lance
who mastered men
with his manhood
in gone

why do you bloom now
jasmine
in this land of ollai

முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?


புறநானூறு 242.
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

ஒல்லையூர் நாட்டு வள்ளல் சாத்தன் இறந்ததால் அவ்வூர் மக்கள் வருந்தியிருக்கின்றனர். முல்லை மலர் இயல்பாக மலர்ந்திருக்கிறது. அதைப் பார்க்கிறார் புலவர்,


முல்லையே! 

இளைய வீரர்கள் சூடமாட்டார்கள்!
வளையல் அணிந்த இளமகளிரும் பறிக்கமாட்டார்கள்!
நல்ல யாழை வாசிக்கும் பாணனும் பறிக்கமாட்டான்!
பாடினியும் சூடிக்கொள்ள மாட்டாள்!

தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு வீரர் பலரையும் எதிர்நின்று கொன்றவன், வலிய வேலையுடைய சாத்தன், அவன் இறந்த பின்பு, இந்த ஒல்லையூர் நாட்டிலே முல்லையே நீயும் பூத்தனையே?
சாத்தன் இறந்தால் பகைவர் அகம் மலர்வர்!
முல்லை மலரே நீ ஏன் மலர்ந்தாய்?

என முல்லை மலரைப் பார்த்துப் புலம்புகிறார் இந்தப் புலவர்.
இந்த அழுகையிலும் அந்த அரசனின் புகழ் நிறைந்துள்ளது.



தொடர்புடைய இடுகை

முல்லையும் பூத்தியோ

14 கருத்துகள்:

  1. அன்புநிறை முனைவரே,
    தினம்தினம் புதிய கருத்துக்கள்.
    இன்று ஒரு தகவல் போல....

    உணவுக்கும் புகழுக்கும் உள்ள வேறுபாட்டை ஊதியம் மூலம்
    நீங்கள் விளக்கியிருப்பது அழகு.
    உழைத்து வந்த வருமானத்தில் நமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு
    மிஞ்சியத்தில் கொஞ்சத்தை தானமாக கொடுத்தால் அதில் கிடைக்கும்
    சந்தோசத்தில் உயிரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

    சங்கப் பாடல்களின் விளக்கம் அழகோ அழகு...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் குணா

    குறள் மற்றும் புறநானூற்றுப் பாடல் - விளக்கம் அருமை. வாழ்க வளாமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. வாழ்வாங்கு வாழ்பவர்கள் இறப்பின் பின்னாலும் நிலைத்திருப்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை எத்தனை உதாரணங்கள்... அருமையான தமிழ்ப் பாடல் முனைவரையா... நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இலக்கியச் சுவை விருந்து படைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. அருமையான புறநானூற்றுப் பாடல் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான புறநானூற்றுப் பாடல்.விளக்கம் மிக அருமை.நன்றி பகிர்வுக்கு.

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நான் இந்த இலக்கிய விபரங்களைத்தான் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன்..என்ன ஒரு இல்லக்கிய நுகர்வு..
    பொறாமையாக இருக்கிறது உங்களைப் பார்க்கும் போது..தமிழ் எவ்வளவு அருமையாய்த் தவழ்கிறது உங்களிடம்..

    பதிலளிநீக்கு
  8. Wow....Pura400 translation manathai allukirathu Sir. Ilakkiya mazhaiyil nanraga nanainthen. Paaraatta vaarthaigal illai. Pakirvukku mikka Nanri.

    பதிலளிநீக்கு
  9. மிக்க மகிழ்ச்சி மகேந்திரன்..
    நன்றி சீனா ஐயா..
    நன்றி கணேஷ் ஐயா..
    நன்றி இராஜா..

    பதிலளிநீக்கு
  10. நன்றி சுந்தரபாண்டியன்
    நன்றி சசி
    நன்றி சசிகலா
    நன்றி சென்னைப் பித்தன் யைா
    நன்றி இராம்வி
    மகிழ்ச்சி பைங்கிளி
    நன்றி டேனியல் ஐயா.

    பதிலளிநீக்கு